விஜயதசமி நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை களைகட்டி வருகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வந்து, மாணவர் சேர்க்கையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கமும், பொருளாதார பாதிப்பும் ஏராளமானோரை அரசுப் பள்ளிகள் நோக்கி ஈர்த்தது, இந்த நிலையில் இன்று அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையும், விஜய தசமியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை கொண்டாடப்படும் அடுத்த நாள் விஜய தசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று புதிய காரியங்களை தொடங்கினால் அமோகமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது.


குறிப்பாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதன்முதலாக விஜயதசமி நாளில் பள்ளிகளில் சேர்த்தால், அவர்கள் படிப்பில் மிகச்சிறந்தவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகின்றனர். இதனால், விஜய தசமியன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் விஜய தசமி தினத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் அண்மைக் காலமாக மாணவர் சேர்க்கையை அரசு நடத்தி வருகிறது. 


இதன்படி, விஜய தசமியான இன்று அரசுப் பள்ளிகளில்  எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு உத்தரவு பிறப்பிட்டது. அதேபோல ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியராவது கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநரகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.





மழலையர்களை வரவேற்ற ஆசிரியர்கள் 


இதையடுத்து, விஜய தசமியான இன்று (அக்டோபர் 5ஆம் தேதி) அரசுப் பள்ளிகளில்  எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இனிப்பு, மலர்கள், எழுதுகோல், சிலேட்டு ஆகியவற்றைத் தந்து ஆசிரியர்கள் மழலையர்களை வரவேற்றனர்.


ஆண்டுதோறும் விஜய தசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவை அளிக்கும் வகையில் நெல்லில் ’அ’ எழுதும் வித்யாரம்பம் நிகழ்வு, கோயில்களில் விமரிசையாக நடத்தப்பட்டு வருவதும் நினைவுகூரத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்:


காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் https://tamil.abplive.com/education/school-education-department-orders-that-special-classes-should-not-be-held-during-quarterly-exam-holidays-77022/amp


MBBS, BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ்: கலந்தாய்வு, வகுப்புகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு.. இதை செக் பண்ணுங்க..
https://tamil.abplive.com/education/mbbs-bds-counselling-classes-start-dates-mcc-announcement-know-in-detail-77044/amp