தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10ம் தேதி வரையும்,1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த சில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான தகவல்களை பெற்றோருக்கு தெரிவித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 

 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம். ஆனால், முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெறக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 



 









அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும், வரும் 10ம் தேதி திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை மெட்ரிக் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

 

 





 

அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் அக்டோபர் 10ம் தேதி திறக்கபட வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை மெட்ரிக் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு முடிந்த பின், அக்.1 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி வரையும், அரசு பள்ளிகளின், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 9ம் தேதி வரையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

அதேநேரம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பையும், பள்ளிக்கல்வித் துறை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, நேற்று பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, வரும் 10ம் தேதி திறக்க வேண்டும்' என தெரிவித்து உள்ளார்.