90 கால கட்டத்தில் பலரும் மறக்கமுடியாத தொடர்களில் மர்ம தேசம், விடாது கருப்பு, ஜி பூம்பா போன்றவை முக்கியமானவை. இன்றும் இதை மறு ஒளிபரப்பு செய்தால் அனைத்து 90ஸ் கிட்ஸ்களும் முதல் ஆளாக துள்ளிகுதித்து இந்த தொடர்களை விரும்பி பார்ப்பார்கள்.
அப்படிப்பட்ட மர்ம தேசம் தொடரில் ராசு என்ற கதாபாத்திரத்திலும், ஜி பூம்பா என்ற தொடரிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் ராஜேந்திரன் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவிற்கு திரைத்துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லோகேஷ் ராஜேந்திரன் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இயக்குநர் சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், “தற்கொலை எதுக்கும் முடிவல்ல மச்சி ... இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தும் இந்த முடிவு எடுத்திருக்க கூடாதுடா ...
மர்ம தேசத்தில் குழந்தையாக தொடங்கிய உன் பயணம் இப்படி முடிந்திருக்க கூடாது 😢😢😢
பெரிய இயக்குநரா ஜெயிச்சிருக்க வேண்டியவன் நீ
Miss you machi Lokesh Rajendran ... RIP” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஹரேஷ் நாராயண் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்…
போர் தெரிந்தவன்தான்.. ஆனால் போதைக்கு இரையாகிவிட்டான்.
#RIP Lokesh Rajendran “ என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த லோகேஷ் ராஜேந்திரன்..?
- மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
- விஜயகாந்த் நடித்த கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் லோகேஷ் ராஜேந்திரன் நடித்துள்ளார்.
- மர்ம தேசம் தொடரின் இயக்குநரான நாகா மீது மிகவும் மரியாதை கொண்டவர்.
- அதன் காரணமாகவே நடிப்பை கைவிட்டு இயக்குநராக ஆக வேண்டும் என்று முயற்சி செய்தார்.
- 6 அத்தியாயம் என்ற ஆந்தாலஜியில் சூப் பாய் சுப்பிரமணி என்ற ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார்.
- தற்போது திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மர்ம தேசம் இயக்குநர் நாகா, தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் சென்னையில் சந்தித்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் லோகேஷ் ராஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.