10, 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு ABP நாடு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. வானமே எல்லை என்ற தொடரின்கீழ் இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு படிப்புகளுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? அதைத் தனிப் படிப்பாகவே தேர்வு செய்து படிக்கலாமா? அல்லது பிற படிப்புகளுடன் சேர்த்துப் படிக்கலாமா? கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? படிக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு எப்படி? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.


ஏஐ படிப்பு என்றால் என்ன?


செயற்கையாக மனிதர்களைப் போலவே சிந்தித்து, செயலாற்றுவதுதான் ஏஐ. சாட் ஜிபிடி, பார்ட், பிங், மிட் ஜர்னி ஆகியவை ஜெனரேட்டிவ் ஏஐ-ஆக உருவெடுத்துள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.


2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என தொடர்ந்து அப்டேட் நடந்துகொண்டே இருப்பதைப் போல ஏஐ துறையிலும் எஸ்ஐ, ஓஐ என மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.


ஏஐ படிப்பைத் தனியாகப் படிக்கலாமா? கூடுதலாகக் கற்றுக்கொண்டால் போதுமா?


ஏஐ டூல்களை உருவாக்க வேண்டும், அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்கள் மட்டும் ஏஐ படிப்பைத் தனியாகப் படிக்கலாம். ஆனால் பிற துறை மாணவர்கள் தங்களின் படிப்போடு, துறைசார் ஏஐ டூல்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் போதும்.


கூகுளில் தரவிறக்கம் செய்தே படிக்கலாம். இப்போது பணம் கட்ட வேண்டியதாக இருந்தாலும் வருங்காலத்தில் இலவசமாகவே கிடைக்கும். 


எப்படிப் படிக்க வேண்டும்?


ஏஐ பாடத்திட்டத்தையும் கணினி அறிவியல் பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருசில பாடங்கள் தவிர பெரிதாக மாற்றம் இருக்காது. அதனால் ஏஐ படிப்பைத் தனியாகப் படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. 


ஏஐ படித்தவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?


ஏஐ படிக்கும் மாணவர்கள் ஏஐ டூல்களைத் தத்தம் துறைகளில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் போதும். வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.


ஏஐ படிப்புகள் குறித்து விளக்கமாக அறிய இந்த வீடியோவைக் காணலாம்.



இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை - துணை மருத்துவப் படிப்பில் லட்சங்களில் ஊதியம்! எப்படி?