பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, வானமே எல்லை என்ற உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை ABP Nadu சார்பில் வீடியோ வடிவில் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் ஆங்கில இலக்கியப் படிப்புகளுக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, எதிர்காலம் குறித்து அலசப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி ஆங்கில இலக்கியத் துறை தலைவர் முனைவர் தங்க குமரன் இதுகுறித்து ஏபிபி நாடு-க்கு அளித்த பேட்டியை இங்கே காணலாம்.
ஏஐ, தரவு அறிவியல் என ஏராளமான தொழில்நுட்பப் படிப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், பாரம்பரியமான ஆங்கிலப் படிப்புகளுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
இவை அத்தனைக்கும் மொழியே அடிப்படை. அடிப்படை தெரியாமல் நவீனமாக எதையும் படிக்க முடியாது. ஆங்கிலத்துக்கு அதற்கென்றே தனித்த தேவை, மதிப்பு, தேவை எல்லாக் காலத்திலும் இருக்கிறது. ஆங்கிலம் என்றாலே இலக்கியம் மட்டுமே என்று நினைக்க வேண்டும். கதை, கவிதை, நாடகம் மட்டுமே இதில் இல்லை.
யாரெல்லாம் ஆங்கில இலக்கியம் படிக்கலாம்? என்ன அடிப்படைத் தகுதி?
12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஆங்கில இலக்கியம் படிக்கலாம். அதேபோல ஆங்கிலம் தெரிந்தால்தான் ஆங்கில இலக்கியம் படிக்க முடியும் என்றில்லை. தமிழ் மீடியத்தில் இருந்து வந்து ஆங்கிலத் துறையில் சாதித்தவர்கள் ஏராளம்.
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
இதில் என்னென்ன படிப்புகள் உள்ளன?
பொதுவான சைக்காலஜி, கிளினிக்கல் சைக்காலஜி, ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, அப்ளைடு சைக்காலஜி ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொது சைக்காலஜி படிப்புகளையே பெரும்பாலும் மாணவர்கள் பிஎஸ்சி படிப்பில் தேர்வு செய்கின்றனர்.
கல்லூரிகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?
மற்ற படிப்புகளைப் பொறுத்தவரை ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால், ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்தவரை நூலக வசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மொழி ஆய்வகம் இருக்கிறதா? அதில் உரிய மென்பொருட்கள் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்?
ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் ஆசிரியர் மட்டுமே ஆக முடியுமா? வேறென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன?
பி.ஏ. ஆங்கில இலக்கியப் படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் ஆவதைத் தவிர வேறு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
கண்டெண்ட் ரைட்டர் ஆக முடியும். திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதும் பணியில் சேரலாம். ஊடகங்களில் பணியாற்றலாம். வலைதள உருவாக்கத்தில் பங்குகொள்ளலாம். என்னதான் ஏஐ, சாட் ஜிபிடி இருந்தாலும் மனிதர்கள் உணர்ச்சியுடன் எழுதும் உள்ளடக்கத்துக்குத் தனி வரவேற்பு இருக்கிறது.
இவை தவிர்த்து போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகலாம். ஏனெனில் எல்லா அரசு வேலைகளுக்கும் மொழிப் பாடத் தேர்வு கட்டாயம் இருக்கும். ஆங்கிலப் பட்டதாரிகள் அரசு நிறுவனங்களில் வேலைக்குச் சேரலாம். அதேபோல மொழிமாற்றம் செய்யும் பணி, ப்ரூஃப் ரீடிங் உள்ளிட்ட பணிகளுக்கும் ஆங்கிலப் பட்டதாரிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
கல்லூரிகளில் எப்படி சேரவேண்டும்?
இன்னும் பல கேள்விகளுக்கு மேலே உள்ள வீடியோவில் விடை காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை: டிப்ளமோ படித்தும் லட்சங்களில் சம்பாதிக்கலாம்- எப்படி?