மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன.தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 59  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




என்னென்ன காலிப்பணியிடங்கள்?


அசிஸ்டண்ட் இன்ஜினியர் பதவிக்கு 5 காலியிடங்களும் , சிவில் ஹைட்ராலிக் ஆபிசர் வேலைக்கு 2 காலியிடங்களும்  , ஜூனியர் டெக்னிக்கல் ஆபிசர் வேலைக்கு 9 காலியிடங்களும்,  முதன்மை சிவில் ஹைட்ராலிக் ஆபிசர் 1 வேலைக்கு காலியிடமும், அசிஸ்டண்ட் இன்ஜினியர் கிரேட் 1 பதவிக்கு 7 காலியிடங்களும் அசிஸ்டண்ட் சர்வே ஆஃபிசர் வேலைக்கு 4 காலியிடங்களும் , ஸ்டோர்ஸ் ஆஃபிசர் வேலைக்கு 1 காலியிடமும், அசிஸ்டண்ட் டைரக்டர் கிரேட் 2 வேலைக்கு 30 காலியிடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியுள்ளவர்கள் upsc.gov.in. எனும் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


New cooperative policy: New cooperative policy: விரைவில் புதிய கூட்டுறவுக்கொள்கை வெளியிடப்படும் - அமித் ஷா அடுக்கிய திட்டங்கள்!


விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:


இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியல் சாதி (எஸ்.சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி), மாற்றுத் திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு. 


கல்வித்தகுதி என்ன?


மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சியின் இணைய தளத்தில் கல்வித் தகுதி, வயது வரம்பு முதலான விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே உள்ள லிங்க்கினை க்ளிக் செய்தும் அறிந்துக் கொள்ளலாம்.


இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி என்ன?, வயது வரம்பு என்ன?


மற்ற பிற செய்திகளையும் படிக்க:


SSC Selection Posts Phase IX 2021: மத்திய அரசு நடத்தும் தேர்வுகள்.. முழு விவரங்கள் இதோ!


’என்னை வேலையை விட்டு போகச்சொன்னார்கள்...’ அனுபவங்களை பகிர்ந்த பாடகர் பென்னி தயால்