அகில இந்திய குடிமைப் பணிக்கான ஐஇஎஸ்,  ஐஎஸ்எஸ் தேர்வு எனப்படும் இந்திய பொருளாதார மற்றும் புள்ளியியல் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

 

இந்திய நிர்வாகத் துறை, இந்திய காவல் துறை, இந்திய வனத் துறை என்று அழைக்கப்படும் முறையே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான காலி இடங்கள், யுபிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல ஐஎஃப்ஓஎஸ் எனப்படும் இந்திய அயலகப் பணி, ஐஇஎஸ் எனப்படும் இந்திய பொருளாதாரத் துறை,  ஐஎஸ்எஸ் எனப்படும் இந்திய புள்ளியியல் துறைக்கான தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்துகிறது. 

 

இந்தத் தேர்வுகள் அனைத்தும் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். 3ஆவது தேர்வில் தோல்வி அடைந்தாலும் முதலில் இருந்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
  

 

அந்த வகையில்  பொருளாதாரத் துறை,  இந்திய புள்ளியியல் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஐஇஎஸ்,  ஐஎஸ்எஸ் எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஆக. 25) வெளியாகி உள்ளன. பொருளாதாரத் துறை அதிகாரிக்கான நேர்காணல் தேர்வுக்கு 39 பேரும் புள்ளியியல் துறை அதிகாரிக்கான நேர்காணல் தேர்வுக்கு 88 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

 

அதேபோல, நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணலின்போது வயது, கல்வித்தகுதி, சாதி, மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றுக்கான அசல் சான்றிதழ்களைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும். 

 

தேர்வு செய்யப்பட்டோருக்கு, நேர்காணலுக்கான தேதி விரைவில் யுபிஎஸ்சி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எனினும் துல்லியமான நேர்காணல் தேதியை அறிய, தேர்வர்கள் e-summon letter-ஐக் காண வேண்டும். நேர்காணல் அறிவிக்கப்பட்ட தேதி, நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

 

யுபிஎஸ்சி ஐஇஎஸ்,  ஐஎஸ்எஸ் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

 

* தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* முகப்புப் பக்கத்தில் தோன்றும்  "Written Result (with name): Indian Economic Service - Indian Statistical Service Examination, 2023" என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* புதிதாகத் தோன்றும் பக்கத்தில், "Written Result with Name" என்ற பிடிஎஃப் இருக்கும். அதை க்ளிக் செய்யவும். 

* உடனே தோன்றும் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். 

* ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து, வைத்துக் கொள்ளவும். 

* அல்லது தேர்வர்கள் https://upsc.gov.in/sites/default/files/WRwN_IES-ISS-2023_Eng_24082023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்தும், தேர்வு முடிவுகளை அறியலாம்.