சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களுடன், தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். 


சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதில் 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களுடன், தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். 


அதன் பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில் வணக்கம் சொல்லி தனது உரையைத் தொடங்கினார், ”பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலைக் கழகம் விளங்குகிறது எனக் கூறினார். மேலும், சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், வெங்கட்ராமன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட மொத்தம் 6 ஜனாதிபதிகளை  சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. சர்.சி.வி. ராமன், சந்திர சேகர் உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இந்த பல்கலைக் கழகத்தில் தான் படித்தனர்” எனக் கூறியுள்ளார்.  


பாரதியார் பாடல்


மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் வான அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்' அங்கேயே நின்றுவிடுவோமா? இல்லை. 'சந்தி, தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்” என பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 


மேலும் அவர், எந்தவொரு கவலையிலும் நீங்கள் மூழ்கிவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும், உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.


பாலின சமத்துவம் - பெண் கல்வி


பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம் என பேசினார். 


இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர்.