தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குநர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் கேம் செஞ்சர் படம்தான் முதலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே ராம் சரணின் RRR படம் உலக அளவில் பெரும் வசூலைக் குவித்ததுடன், ஆஸ்கார் விருது வென்றது என்ற தனிப் பெருமையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் RRR படத்திற்குப் பின்னர் கேம் சேஞ்சர் படம் தான் ராம் சரணின் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. RRR படத்திற்குப் பின்னர் ராம் சரணின் ரசிகர்கள் வட்டாரம் என்பது வெளிநாடுகளிலும் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. தற்போது வெளிவந்துள்ள தகவல் என்பது படத்தில் உள்ள பாடல்கள் உருவாக்கத்திற்கு மட்டும் மொத்தம் ரூபாய் 90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம். மொத்தம் உள்ள ஐந்து பாடல்களுக்கு மட்டும் ரூபாய் 90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம். அப்படியானால் ஒரு பாடலுக்கு மட்டும், 18 கோடி ரூபாய் என்ற அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. 


இயக்குநர் ஷங்கரின் மற்ற படங்களை விட கேம் சேஞ்சரின் பாடல்களுக்கான பட்ஜெட் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஐந்து பாடல்களுக்காக தயாரிப்பாளர் தில் ராஜு 90 கோடி ரூபாய் செலவழிக்க வைத்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர். பார்வையாளர்களுக்கு ஒரு பிரமாண்டமான மற்றும் பார்வைக்கு ஆடம்பரமான இசை அனுபவத்தை உறுதி செய்ய ஷங்கர் விரும்பியதால்தான் இந்த அளவிற்கு செலவாம். மேலும், ஷங்கர் மீது பெரும் நம்பிக்கையில் உள்ள தயாரிப்பாளர் தில் ராஜும் இன்னும் எத்தனை கோடிகள் வேண்டும் என கேட்கிறாராம்.  


இசையமைப்பாளர் எஸ் தமன் இப்படத்திற்கு தனது சிறந்த பாடல்களையும் மற்றும் பின்னணி இசையையும் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் வியப்பில் மூழ்குவார்கள் என்று கூறப்படுகிறது. பிரம்மாண்டமான பாடல்களுக்கு ஜானி மாஸ்டர் மற்றும் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளனர். மேலும் இது ராம் சரணின் நடனத்தில் பாடலை திரையரங்கில் ரசிகர்களுக்கு ட்ரீட்-ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 


படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருந்தது.


அரசியலை மையமாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை தயாரிக்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். நடிகர் ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வர இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் தமன்.


படத்தின் திரைக்கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு மற்றும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.