மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ’ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு’(one nation one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(CUET) வரும் ஜூலை மாதம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெகதீஸ் குமார் கூறுகையில், மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(Common University Entrance Test) என்ற நடைமுறை மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு இருக்காது. இந்த நடைமுறை, அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும் என்றார். இனி மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுள்ளது என்பது மாணவர்களுக்கு நலன் அளிப்பதாக இருக்கும். இதன் மூலம் கட்-ஆஃப் முறை மாற்றப்பட்டு, மாணவர்கள் எழுதும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இருக்கும். இந்தப் பொது நுழைவுத் தேர்வு மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும். ஏனெனில் விண்ணப்பதாரர்கள் ஒரு தேர்வு மட்டுமே எழுதினால் போதுமானது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆனால், 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் பல்கலைகழகம் பொதுத் தேர்வில் பங்கேற்க தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கலாம். பொதுத் தேர்வு எழுத தகுதி மதிப்பெண்ணை அந்ததந்த பல்கலைகழகங்கள் முடிவெடுக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் தேர்வு என எல்லாம் கணினி முறையில்தான் இருக்கும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலனவர்களிடம் ஸ்மாட்ஃபோன் இருக்கும். மாணவர்கள் இண்டர்நெட் சென்ட்ர் சென்று விண்ணப்பிக்கலாம்.
Jio Prepaid Plans IPL 2022: நெருங்கும் ஐபிஎல்! இலவசமா ஹாட்ஸ்டார் வேணுமா? ஆஃபர் கொடுக்கும் ஜியோ! இதப்படிங்க முதல்ல!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்