அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான கலிபோர்னியா மாகாணத்தில்தான், அந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் உள்ளது. இந்த நகரத்தில்தான், பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் தீயானது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காடுகளில் பற்றிய தீயானது, அதனுடன் அதிவேக காற்றும் சேர்ந்து கொண்டதால் , வேகமாக தீயானது பரவி பலரது உயிரையும் பறித்துள்ளது.
24 பேர் உயிரிழப்பு:
ஜனவரி 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில்,சுமார் 6 இடங்களில் மிகப்பெரிய அளவிலான் தீப்பற்றி எரிந்து வந்த நிலையில், தற்போது 4 இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இன்னும் இரண்டு இடங்களில் தீயை கட்டுப்படுத்துவதில் , சிரமம் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.இந்த காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், பலர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுவதால், உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சமும் நிலவுகிறது.
சேதங்கள்
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளதாகவும், கூறப்படுகிறதுமேலும் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும், 1.6 லட்சம் பேருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த காட்டுத்தீயால் அமெரிக்காவின் பொருளாதரத்திலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பால் 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை ( ரூபாய் மதிப்பில் சுமார் 10.லட்சம் கோடி ) சேதம் ஏற்படக் கூடும் என கூறப்படுகிறது.
வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்ததன் காரணமாக, காப்பீட்டு இழப்புகள் எட்டு பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுவதால், காப்பீட்டு நிறுவனங்களும் கவலையில் உள்ளனர்.
மேலும், அப்பகுதியைச் சுற்றி ஹாலிவுட் படங்களின் இருப்பிடம் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஹாலிவுட் பட ஹீரோக்கள் பலரின் வீடுகளும் தீயில் எரிந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் தீவிரம்:
இந்நிலையில், எதனால், இந்த காட்டுத்தீயானது உருவானது என உறுதியாக கூற முடியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கு கடந்த அக்டோபர் மாதம் வறண்ட பருவநிலையும் மிகக் குறைந்த மழைப்பொழிவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், மரங்கள் , புல்வெளிகள் காய்ந்த நிலையில் இருந்ததாகவும் எளிதில் தீப்பற்றியிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இதனுடன் சான்டா ஆனா காற்று என அழைக்கப்படும் சக்திவாய்ந்த காற்றும் காட்டுத்தீயை தீவிரப்படுத்தியது எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த தருணத்தில், தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வான்வெளியிலிருந்து ராசாயண பொடிகளையும்,தரைவழியில் இருந்து தண்ணீரைக் கொண்டும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.