UGC NET 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது? ஏன்? வெளியான அறிவிப்பு

UGC NET 2024 Exam Date: தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Continues below advertisement

யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

எதற்கெல்லாம் யுஜிசி நெட் தேர்வு?

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor) ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில், தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

Continues below advertisement
Sponsored Links by Taboola