ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள யுஜிசி தேசிய தகுதித் தேர்வு மையங்களின் விவரங்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இணையதளத்துக்குச் சென்று, தேர்வு மைய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.


இந்த நெட் தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் கணினி முறையில் இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பல்வேறு தினங்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வு நடந்த நிலையில், தற்போது 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நெட் தேர்வு நடக்கிறது.


தேர்வு எப்போது?


யுஜிசி நெட் ஜூன் மாத அமர்வுக்கான தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 83 பாடங்களுக்கு, கணினி வழியில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக ஜூன் 18ஆம் தேதி நெட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் தாள் கசிவு எதுவும் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்குத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.


இதன்படி, ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நெட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள யுஜிசி தேசிய தகுதித் தேர்வு மையங்களின் விவரங்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.


பெறுவது எப்படி?



  • தேர்வர்கள் ugcnet.nta.ac.in அல்லது nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

  • அல்லது https://ugcnet.ntaonline.in/frontend/web/cityintimationslip/city-intimation-july2024 என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம். 

  • அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

  • அதில், city intimation slip என்னும் தேர்வு நடைபெறும் நகரங்களின் விவரம் வெளியிடப்பட்டு இருக்கும். இதன்மூலம், தேர்வர்கள் தங்களின் பயணத்தைத் திட்டமிட முடியும்.

  • ஹால் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு, பொதுவாக தேர்வுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.


கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


மேலும் தகவல்களுக்குhttps://ugcnet.nta.ac.in/