2023ஆம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வின் தற்காலிக விடைக் குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் இன்று இரவு 11.50 மணிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
2023ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு 5 கட்டங்களாக 16 நாட்களுக்கு தலா 2 ஷிஃப்டுகள் வீதம் 32 ஷிஃப்ட்டுகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் 186 நகரங்களில் 663 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
முதல் கட்டத் தேர்வு பிப்ரவரி 21 முதல் 24ஆம் தேதி வரையிலும் 2ஆம் கட்டத் தேர்வு பிப்ரவரி 28 முதல் மார்ச் 2ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. அதேபோல 3ஆம் கட்டத் தேர்வு மார்ச் 3 முதல் 6ஆம் தேதி வரையிலும் 4ஆம் கட்டத் தேர்வு மார்ச் 11 மற்றும் 12 தேதிகளிலும் நடைபெற்றது. இறுதியாக 5ஆம் கட்டத் தேர்வு மார்ச் 13 முதல் 16ஆம் தேதி வரை நடந்தது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வின் தற்காலிக விடைக் குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் இன்று இரவு 11.50 மணிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்குக் கட்டணமாக ரூ. 200 தொகையைத் தேர்வர்கள் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணத்தைச் செலுத்த முடியும்.
எப்படி ஆட்சேபனை செய்வது?
* தேர்வர்கள் ugcnet.nta.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
* முகப்புப் பக்கத்தில் இருக்கும் answer key of UGC NET 2023 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* UGC NET விடைக் குறிப்புக்குப் புதிய பக்கம் திறக்கப்படும்.
* விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணைப் பதிவு செய்யவும்.
* சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
* யுஜிசி நெட் 2023ஆம் ஆண்டுக்கான விடைக் குறிப்பு தோன்றும்.
* வருங்காலப் பயனுக்காக தோன்றும் பக்கத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2023/03/2023032314.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். தேர்வர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
*
இதையும் வாசிக்கலாம்: பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, அனைத்து பாடங்களுக்கான மாதிரி வினாத் தாளைக் காணலாம்.