பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
சேலம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை பெறாமல் தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வித் திட்டங்கள் நடத்தி வருகிறது என்றும், அதில் பல மோசடிகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், மேற்கண்ட படிப்புகளுக்கு 2020 ஆம் ஆண்டுடன் அனுமதி முடிவடைந்து விட்டதால், அதன் பிறகு பெற்ற பட்டங்கள் செல்லாது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டாம் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மூலம் ஆன்லைன் படிப்புகள் நடத்துவது குறித்து விசாரிக்க வேண்டும். இதுகுறித்து, ஆளுநர் மற்றும் உயர் கல்வித்துறைச் செயலருக்கு யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியிலான கல்வித் திட்டங்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது என்றும், ஆனால் அதன்பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவின் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த கல்வித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்றும், முற்றிலும் விதிமீறல்கள் நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த கல்வி ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பல்கலைக்கழக விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது எனவும், அடுத்த இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு இந்த கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளூநர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
Also Read: கல்வித் தொலைக்காட்சி சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்; என்னென்ன தகுதிகள்?- முழு விவரம்
Also Read: அறநிலையத்துறையில் மொழி பெயர்ப்பாளர் வேலை.... தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்