பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் கல்வி தொலைக்காட்சிக்குப் புதிதாக சிஇஓ பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 ஆண்டுகாலம் கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரித்த முன்னனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:


தொலைதூர கிராமங்களில் வசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கொரோனா கால ஊரடங்கில் கல்வித் தொலைக்காட்சி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கற்றல் அனுபவங்களை அளித்தது. 


வெவ்வேறு பாடங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை நிகழ்த்தி வருகின்றனர். இந்த கல்வி தொலைக்காட்சிக்குப் புதிதாக சிஇஓ பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


என்ன தகுதி?
அரசு/ தனியார் தொலைக்காட்சிகளில் 5 முதல் 8 ஆண்டு காலம் வரை கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்த முன்னனுபவம் உள்ளவர்கள் சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி


எலக்ட்ரானிக் மீடியா / விஸ்காம் / மீடியோ புரொடக்‌ஷன் படிப்பு படித்திருக்க வேண்டும். 




கூடுதல் தகுதிகள்



  • தமிழ் மொழியில் எழுத்து மற்றும் பேச்சு தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் 

  • சிறப்பான பேச்சுத் திறமை/ தகவல் தொடர்புத் திறன் அவசியம்.

  • MS Office / G Suit-ல் போதுமான  கணினிஅறிவு தேவை

  • தொலைக்காட்சிக்கான திட்டமிடல் மற்றும் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளுக்கான உத்தியை உருவாக்க வேண்டும். 

  • ஆக்கப்பூர்வமான மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை அவசியம்.

  • குழுவை வழிநடத்துதல் மற்றும் நிர்வகித்தல்

  • ஊடக திட்டமிடல் செயல்முறை பற்றிய வலுவான புரிதலும் ஊடக வணிக உத்தியும் முக்கியம்.

  • தேவைக்கேற்ப வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்கத் தயாக இருக்க வேண்டும்.

  • தொலைக்காட்சியை நடத்தத் தேவையான அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். 

  • கேபிள் ஆபரேட்டர்கள், எம்எஸ்ஓக்கள் மற்றும் டிடிஎச் பிளாட்ஃபார்ம்களுடன் விற்பனைத் தரப்புடன், வீடியோ தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் எவ்வளவு?
விண்ணப்பதாரர்கள் தங்களின் அனுபவத்தையும் எதிர்பார்க்கும் ஊதியத்தையும் குறிப்பிட்டு அனுப்பலாம். 


விண்ணப்பத்தை அனுப்பிய பின் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பிறகு ஊதியம் குறித்துத் தீர்மானிக்கப்படும். 


விண்ணப்பதாரர்கள் https://fomsgle/KPVFRSK5JHwf9gd68 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண