Translation Training: மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவரா? இதோ இலவசப் பயிற்சி- சேர்வது எப்படி?
Translation Free Training: மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த இலவசப் பயிற்சி. இதில் பங்குபெறுவது எப்படி என்று காணலாம்.

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், நடிகர் கமல்ஹாசன் கமல் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த பண்பாட்டு மையம் சார்பில், ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்தப்படுகிறது.
ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.குப்புசாமி பயிற்றுவிக்க உள்ளார்.
Just In




விண்ணப்பிப்பது எப்படி?
இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுய விவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவமும் இணைக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
எப்போது, எங்கே பயிற்சி?
பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தத் தகவலை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.