ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏப்ரல் 26 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணபிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு தொடர் கோரிக்கைகள் எழுந்ததையெடுத்து, 18.04.2022 முதல் 26.04.2022 வரை தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுகிறது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பத்தாரர்கள் தேர்விக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் இணையதள சர்வர் தாமதமாக இருந்ததையெடுத்து, கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. அதை தொடர்ந்து, ஆரிசிரியர் தேர்வு வாரியம் கால இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




 


தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்கலாம். டெட் தேர்வு நடக்கும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வுக் கட்டணம்


தேர்வர்களுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.  


வயது வரம்பு


தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.


தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற இணைப்பைச் சொடுக்கி, தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.


 


Yuvan shankar Raja: “கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” : யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்


TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. முழு விவரம்..




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண