புதுச்சேரி அருகே ஆன்லைன் விளையாட்டு மூலம் 8 லட்சம் ரூபாய் பணத்தை வென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளரின் பணம் சில மணி நேரங்களிலேயே நூதன முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் பணத்தை வென்றவருக்கு சிறிது நேரத்திலேயே விபூதி அடித்த சம்பவம் நடந்திருக்கிறது. புதுச்சேரி விலியனூர் பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன், இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் கடந்த இரண்டு வருடங்களாக சிவனேசன் என்ற ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தை விளையாடி வந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்தும் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை விடாமல் தொடர்ந்து வழக்கம் போல கடந்த வாரம் ஆன்லைனில் சூதாட்டத்தை விளையாடி அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறார். பின்னர், சிவனேசனின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது, அதில் 11 லட்சத்து 49 ஆயிரத்து 550 ரூபாய் பெற்றுள்ளீர்கள் எனவும் வரிகள் போக 8 லட்சத்து 4 ஆயிரத்து 788 ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று சிவனுக்கு அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, அந்த சமயத்தில்தான் ட்ரீம் லெவன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். தொடந்து அதே நபர் சிவனேசனை தொடர்புகொண்டு தங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என்பதை பரிசோதிக்க வேண்டும் எனக்கூறி வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி என அனைத்தையும் கேட்டு சேகரித்திருக்கிறார்.
லட்சாதிபதியாக போகிறோம் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த சிவனேசன் முழு விபரங்களையும் கூறியுள்ளார். பேச்சுவாக்கில் அந்த நபர் தனது செல்போனுக்கு வந்த ஒடிபி நம்பரை சிவனேசன் அந்த நபரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மொத்த பணமும் சில நிமிடங்களிலேயே பறிபோனது அப்போதுதான் தெரிய வருகிறது.
பின்னர் சுதாரித்துக் கொண்ட சிவனேசன் தனக்கு வந்த செல்போன் என்னை அழைத்து பேசியுள்ளார் பணத்தை அபேஸ் செய்த நபர் பணம் போனால் நான் என்ன செய்ய முடியும் என திமிராக பேசி மிரட்டி உள்ளார். இதையடுத்து சிவனேசன் போலீஸில் புகார் கொடுத்ததுள்ளார். தனக்கு நடந்தது போல மற்றவர்கள் ஏமாறக் கூடாது என தனக்கு நடந்ததை வெளியே செல்கிறேன் எனக் சிவனேசன் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்