டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.25) முதல் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பல்வேறு பயிற்சி மையங்கள் குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சியை வழங்கி வருகின்றன.
நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்
அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.25) முதல் தொடங்கப்பட உள்ளன.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளதாவது:
சென்னை, அசோக் நகர், அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr (IV) & VAO தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன.
மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
சென்னை: 9042991182 அங்கனூர்: 9843660449 ஜெயங்கொண்டம்: 9865756216 சிதம்பரம் 9894447722
திருப்போரூர் 74491 97728 கடலூர் 9600244839 கும்பகோணம் 7904832410
திருவாரூர்: 8825995117 திருச்செந்தூர்: 8675590803 கள்ளக்குறிச்சி: 9003612449 நாகப்பட்டினம் 9787825382 நெடுங்குளம் 7639091631 புதுகோட்டை 9443903727 குறிஞ்சிப்பாடி 9042991182
மதுராந்தகம் 9566227765 திண்டிவனம் 9043751262 வடலூர் 9942389886
திருச்சி 8508082300 தஞ்சாவூர் 9600792241
மின்னஞ்சல்: thirumapayilagam@gmail.com
இவ்வாறு திருமா பயிலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.