நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பிரச்சார முன்னோட்டங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஜெயலலிதா பேசும் AI பரப்புரை வீடியோவையும் வெளியிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்றும், கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். 


எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது: “


”அதிமுக உறுப்பினர்கள் தமிழக மக்களின் ஒருமித்த கொள்கை , கருத்தின்படி செயல்படுவர்.திமுக போல அதிகார , பண பலம் இல்லை.  2.6 கோடி தொண்டர்கள் காலத்தில் நின்று உழைக்க போகின்றனர். இரவு பகல் பாராமல் மக்களை சந்தித்து அயராது உழைக்க வேண்டும். நாளை நமதே. 40ம் நமதே. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும்.
விஷமத்தனமான பிரசாரத்தை சிலர் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர்.சிறப்பான கூட்டணி அமையும்.



2014-19 வரை 37 அதிமுக நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலை எதிரொலித்தனர். காவிரி மேலாண்மை ஆணையத்துகாக நாடாளுமன்றத்தை முடக்கினோம். திமுக கூட்டணியில் 38 உறுப்பினர்கள் இதுவரை தமிழக பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனரா..? தேர்வை கொண்டுவந்தது திமுக. ஆட்சிக்கு வந்தபின் முதல் கையெழுத்து நீட்டுக்கு எதிராக என்றார்கள். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எந்த கோரிக்கையையும் எழுப்பவில்லை. 


மேகதாது அணை குறித்து மத்திய நீர்வள ஆணையத்துக்கு காவிரி ஆணைய தலைவர் பரிந்துரை அனுப்பியுள்ளார். மேகதாது குறித்து மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகத்தின்  விளக்கம் கேட்டவுடன் , அதன் இயக்குனர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தோம். அது இன்னும் நிலுவையில் உள்ளது. நாடாளுமன்றத்தில் நாங்கள் 16 ஆயிரம் கேள்விகளுக்கு மேல் கேட்டிருந்தோம் , ஆனால் திமுக உறுப்பினர்கள் 9 ஆயிரம் கேள்விகள் கேட்டுள்ளனர்.  எங்களை விட 7 ஆயிரம் கேள்விகள் குறைவாகத்தான் கேட்டுள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டோம். பாஜகவுடன் யார் உறவாக உள்ளனர்.கேலோ விளையாட்டு போட்டிக்கு சிவப்பு கம்பளம் விரித்து பிரதமரை வரவேற்றது திமுக. go back Modi என்றவர்கள் இப்போது வரவேற்பது ஏன்?
எத்தனை முனை போட்டி என தேர்தல் வந்தால்தான் தெரியும். எங்களுக்கு எதிரி ஒருவரும் கிடையாது. மக்கள் தெளிவாக உள்ளனர்.


உதயநியால் நீட் ஒழிப்பு ரகசியத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் , ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி வீணாக குப்பை தொட்டியில் போட்டு விட்டனர். வண்டியில் ஒவ்வொரு டயராக கழன்று  விடுவதை போல் இந்தியா கூட்டணி உள்ளது. இப்போது அதில் 2 டயர்தான் உள்ளது. மின்னணு வா்குப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டது.


தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. உயர்கல்வியில் எங்கள் ஆட்சியிலேயே தமிழகம் 52 சதவீத சேர்க்கையுடன் முன்னிலையில் தான் இருந்தது. இப்போதைய ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர். மூன்று லட்சம் கோடிக்கு மேல் அரசை கடன் வாங்க வைத்ததுதான் தமிழக அரசு அமைத்த நிதி மேலாண்மை குழுவின் சாதனை”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.