தமிழ்நாடு அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி பல தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் குரூப் 1 முதன்மை தேர்வு இந்த மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஆணை என்ற படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வந்தது. இது தேர்வர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

 

இந்நிலையில் இதை தெளிவுப்படுத்தும் விதமாக டிஎன்பிஎஸ்சி ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  தொகுதி IV  தொடர்பான தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. 

Continues below advertisement

தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே  வெளியிடப்படும். தொகுதி  IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.com என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரித்து கொள்ளப்படுகிறது ” எனக் கூறியுள்ளது.

 டிஎன்பிஎஸ்சியின் இந்த விளக்கம் தேர்வர்கள் மத்தியில் இருந்த குழப்பத்தை தெளிவுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண