அரசு வேலைக்கான மவுசு என்றுமே குறையாது. அரை அணா காசு என்றாலும் அரசாங்க காசு என்று கிராமங்களில் சொல்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2022 ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்ற 10,205 பேர் அரசின் பல்வேறு துறைகளில் இளநிலைப் பணியாளர்களாகப் பணியில் சேர உள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், தேர்வில் வெற்றி பெற்றோருக்குப் பணி ஆணைகள் வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ’’அரசுப் பணி வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. அரை அணா காசு என்றாலும் அரசாங்க காசு என்று கிராமங்களில் சொல்வார்கள். அரசு வேலைக்கான மவுசு என்றுமே குறையாது.
அரசுப் பணியில் சேரும் நீங்கள் மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு சேர்க்கும் பணியை எந்தக் குறையும் இன்றி நிறைவேற்ற வேண்டும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.