பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப் 2 மெயின் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதை https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் காணலாம்.


குரூப் 2 முதன்மைத் தேர்வு பொது அறிவு, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துக்கான தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வும் நடக்கிறது. அதேபோல, விவரித்து எழுதும் வகையிலான இரண்டாம் தாள் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி நடக்க உள்ளது.


இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘’எண்‌: ௦8,2024, நாள்‌ 20.06.2024.ன்‌ வாயிலாக ஒருங்கிணைந்த சூடிமைப்‌ பணிகள்‌ குரூப்- 2 (குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகள்‌) பணிகளுக்கான கொள்குறி வகை
முதல்நிலை தேர்வு 14.09.2024 முற்பகல்‌ நடைபெற்றது.


தேர்வு தேதிகள் என்ன?


தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கை எண்‌:௦8.,2024) நாள்‌ 19:12.2024-ன்‌ படி ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு-2 (குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகள்‌) முதன்மைத்‌ தேர்வு தாள்‌ - 1] பொதுஅறிவு மற்றும்‌ பொது திறனறிவு
மனக்கணக்கு நுண்ணறிவு மற்றும்‌ மொழி (பொதுத்தமிழ்‌ அல்லது பொது ஆங்கிலம்‌) கொள்குறி வகை தேர்வு ௦8.02.2025 முற்பகலில்‌ நடைபெற உள்ளது. 


அதேபோல தாள்‌ - 1 தமிழ்மொழி தகுதித்‌ தேர்வு 08.02.2025 பிற்பகல்‌ மற்றும்‌ குரூப் Il பொதுஅறிவு தாள்‌ - II (Descriptive) 23.02.2025 முற்பகலில்‌ நடைபெற உள்ளது.


தேர்வாணையத்தின்‌ இணையதளத்தில் வெளியீடு



தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம்‌ செய்யப்பட்‌டுள்ளது.


ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?


விண்ணப்பதாரர்கள்‌ மேலே குறிப்பிட்ட இணைய தளத்தை க்ளிக் செய்யவும். 


தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த
தேதியை உள்ளீடு செய்ய வேண்டும். 


அவ்வாறு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in