குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் முதன்மைத் தேர்வு தேதி ஆகியவை எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  


மாநில அரசின் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் குரூப் 1, 2, 3, 4 என பலவகையான தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது.  இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.


குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள 2,327 பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


வெளியான அறிவிப்பு


இந்த நிலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் மற்றும் முதன்மைத் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதேபோல ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகளுக்கான (நேர்முகத் தேர்வு பதவிகள்) முடிவுகள் உத்தேசமாக நவம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






இதுகுறித்த விரிவான தெரிவு அட்டவணையை https://www.tnpsc.gov.in/tamil/SelectionSchedule.html என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.