குரூப் 2, 2ஏ மெயின்ஸ் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறையில் மாற்றங்களை அறிவித்து, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன? பார்க்கலாம்.


பாடத்திட்டத்தில் மாற்றம்


குரூப் 2 முதன்மைத் தேர்வு பாடத்திட்டம், பெரும்பாலும் தேசிய அளவிலான பொருளாதார, சமூக சிக்கல்கள் நிர்வாகத்தைப் பற்றி இருக்கிறது. எனினும் இது தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு, இந்தியாவின் நவீன வரலாறு, தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு, இந்தியாவின் சமூக நீதி, அரசியலமைப்பு, நிர்வாகம் ஆகியவை குரூப் 2 பாடத்திட்டமாக உள்ளது.  இவை தவிர்த்து அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களும் முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்ளது.


குரூப் 2 திருத்தப்பட்ட பாடத்திட்டத்தைக் காண: https://tnpsc.gov.in/static_pdf/syllabus/CCSE_Group%20II_Syllabus.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


அதே நேரத்தில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் தமிழ்நாட்டையே பெரும்பாலும் மையப்படுத்தியதாக உள்ளது.  இதிலும் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன


குரூப் 2 திருத்தப்பட்ட பாடத்திட்டத்தைக் காண: https://tnpsc.gov.in/static_pdf/syllabus/CCSE_Group%20IIA_Syllabus.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


தேர்வு முறையில் என்ன மாற்றம்?


Group 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் ஒன்றாக இணைத்து நடத்தப்பட உள்ளன. இவை கொள்குறி வகையிலேயே கேட்கப்படும். குறிப்பாக பொது பாடம் (General Studies) டிகிரி தரத்திலும், Aptitude and Mental Ability 10ஆம் வகுப்புத் தரத்திலும் மொழிப்பாடம் (தமிழ் அல்லது ஆங்கிலம்) 10ஆம் வகுப்புத் தரத்திலும் இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


எனினும் முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும். அதேநேரத்தில் வழக்கம்போல குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதும் வகையில் டிஸ்கிரிப்டிவ் முறையில் நடத்தப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


கொள்குறி வகையில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு


எனினும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு, அப்ஜெக்டிவ் (கொள்குறி) முறையில் நடத்தப்பட உள்ளது. ஆனாலும் தமிழ் தகுதித் தேர்வு (Tamil Eligibility Test) மட்டும் விரித்து எழுதும் வகையில் நடைபெற உள்ளது. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும் இது தகுதித் தேர்வு மட்டுமே. அதனால் 40 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 


குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முறை, General Studies, General Intelligence and Reasoning ஆகிய பிரிவுகளோடு, மொழிப் பாடத்தையும் கொண்டிருக்கும். எனினும் இவை அப்ஜெக்டிவ் முறையில் மட்டுமே கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/