டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று தேர்வர்கள் குழம்பி வந்த நிலையில், அதற்கு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.


2327 காலிப் பணியிடங்கள்


குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2327 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன.


தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


தேர்வு விவரங்கள்


* முதல்நிலைத் தேர்வு


* முதன்மைத் தேர்வு


* நேர்காணல்


முதல்நிலைத் தேர்வு முறை: ஆஃப்லைன்
நேரம்: 3 மணி நேரம் 
பிரிவுகள்:



  • பொது தமிழ்/பொது ஆங்கிலம்

  • பொது ஆய்வுகள்

  • திறன் மற்றும் மன திறன் சோதனை



மொத்த கேள்விகள்: 200


ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது.
மதிப்பெண்கள்: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ்)


 முதன்மைத் தேர்வு முறை: ஆஃப்லைன்



  • நேரம்:
    தாள்-I: 1 மணி 30 நிமிடங்கள்
    தாள்-II: 3 மணி நேரம்
    பிரிவுகள்:
    தாள்-I (கட்டாய தமிழ் தகுதி  தாள் )
    தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு

  • துல்லியமான  எழுத்து

  • புரிதல்

  • ஹிண்ட்ஸ் டெவலப்மெண்ட்

  • கட்டுரை  எழுதுதல் (பொது)

  • கடிதம்  எழுதுதல் (அதிகாரப்பூர்வ)

  • தமிழ் மொழி அறிவு



தாள்-II (பட்டம் தரநிலை) - பொது ஆய்வுகள் (விளக்க வகை)


மொத்த மதிப்பெண்கள்:
தாள்-I: 100 (தகுதி)
தாள்-II: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ் தாள்-II


இந்த நிலையில் குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு 7,90,376 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு?


எனினும் அண்மையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியான ஆண்டு அட்டவணையில், செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதா என்று தேர்வர்கள் குழம்பினர்.






விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி  


இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, செப்டம்பர் 14ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.