டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே தெரிவித்தபடி, குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிக்கை இன்று வெளியாகி உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 645 அரசு காலி இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சார்பதிவாளர்‌, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌, வனவர்‌, முதுநிலை வருவாய்‌ ஆய்வாளர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு - 11 (குரூப் 2 மற்றும்‌ குரூப் 2 A) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால்‌ 2025ஆம்‌ ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில்‌ குறிப்பிட்டவாறு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்வர்கள்‌ 15.07.2025 முதல்‌ 13.08.2025  வரை தேர்வாணைய இணையதளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. முதல்நிலைத்‌ தேர்வு28.09.2025 அன்று நடைபெறும்‌. தேர்வர்கள்‌ தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும்‌ செலுத்தலாம்‌.

தொடர்ச்சியாக 13வது முறையாக தேர்வாணையத்தின்‌ ஆண்டுத் திட்டத்தில்‌ குறிப்பிட்ட தேதியில்‌ தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால்‌ தவறாமல்‌ வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2ஏ தேர்வுத் திட்டம்‌ மாற்றி அமைப்பு

தேர்வர்களின்‌ நலன்‌ கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ (முதன்மை) தேர்வு குரூப் 2ஏ பணிகளின்‌ தேர்வுத் திட்டம்‌ மாற்றி அமைக்கப்பட்டுள்‌ளது.

2018 முதல்‌ 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில்‌, முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில்‌ (2024 மற்றும்‌ 2025), ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு குரூப் 2 மற்றும்‌ குரூப் 2ஏ பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால்‌ வெளியிடப்பட்டுள்ளது.

2025ம்‌ ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு- 2 (குரூப் 2 மற்றும்‌ குரூப் 2ஏ  பணிகள்‌) மூலம்‌ ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஆம்‌ ஆண்டு அறிவிக்கையில்‌ வெளியிடப்பட்டகாலிப்பணியிடங்களின்‌ எண்ணிக்கை, தோராயமானதாகும்‌.

காலி இடங்கள் இன்னும் அதிகரிக்கப்படும்

மேலும்‌ அரசுத்துறை, நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும்‌ பட்சத்தில்‌ கலந்தாய்விற்கு முன்பாக மேலும்‌ அதிகரிக்கப்படும்‌ எனத்‌ தெரிவித்து கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/