குரூப் 1 சி பதவிக்கான பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய, பிப்ரவரி 12 வரை கடைசி வாய்ப்பு அளிப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 04 நாள் 23.04.202 இன் வாயிலாக மாவட்ட கல்வி அலுவலர் தொகுதி IC பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன், அதாவது சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Continues below advertisement

பிப்.12 வரை கடைசி வாய்ப்பு

எனவே இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 06.02.2026 முதல் 12.03.2026 இரவு 11:40 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறு பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தத் தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணைய தளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமை கோரல் (claim) விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/