மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 07, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்  
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 
* கப்பலுார், *  கருவேலம்பட்டி, *  சம்பக்குளம்,
 
*  பரம்புபட்டி, *  சிட்கோ, * மெப்கோ, * தியாகராஜர் மில்,
 
* ஜெ.எஸ்.அவென்யூ, *  புளியங்குளம், *  சொக்கநாதன்பட்டி,
 
* தர்மத்துப்பட்டி, *  உச்சப்பட்டி, *  வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,
 
* தனக்கன்குளம், *  நிலையூர், *  கைத்தறிநகர், *  ஹார்விபட்டி,
 
*  பி.ஆர்.சி., காலனி, *  தொழிற்பேட்டை, *  ஹைடெக் ஆட்டோமொபைல்,
 
*  வேடர்புளியங்குளம், *  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,
 
* ஹவுசிங் போர்டு, கூத்தியார் குண்டு, * தோப்பூர்,
 
* முல்லை நகர், *  எஸ்.ஆர்.வி., நகர், *  இந்திரா நகர்,
 
*  மில்காலனி, *  இந்தியன் ஆயில், *  காஸ் கம்பெனி.
 
திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா, ரிஷபம்.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
 
 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
 
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்