தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதற்கு மே 22 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  அதன்படி,


மாவட்டக் கல்வி அதிகாரி (பள்ளிக் கல்வித்துறை) – 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 


மொத்தமுள்ள 8 இடங்களில் பொதுப் போட்டி பிரிவு - 6 இடங்கள்


அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்- 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


வயது வரம்பு


மாவட்டக் கல்வி அதிகாரி- 32 வயது (பொதுப் போட்டி பிரிவு)


- 42 வயது ( அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பிரிவு)


பிசி, பிசி முஸ்லிம்கள், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – வயது வரம்பு எதுவும் இல்லை.


கல்வித் தகுதி


பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி


யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


மற்றும் பள்ளியில் தமிழ் படித்திருக்க வேண்டும். அதேபோல பி.எட். அல்லது கல்வியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு முறை



  • முதல்நிலைத் தேர்வு

  • முதன்மைத் தேர்வு

  • நேர்காணல்


முதல்நிலைத் தேர்வு


பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரத்தில்) – 175 கேள்விகள்


திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு – 25 கேள்விகள்


ஆக மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.


முதன்மைத் தேர்வு


முதல் தாள் - தமிழ் தகுதித் தேர்வு  (10ஆம் வகுப்புத் தரம்) – 100 மதிப்பெண்கள்


இரண்டாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்) – 250 மதிப்பெண்கள்


மூன்றாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்) - 250 மதிப்பெண்கள்


4ஆம் தாள் – கல்வி (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள். இது அப்ஜெக்டிவ் முறையில் கணினி மூலம் நடத்தப்படும்.


மொத்தம் – 750 மதிப்பெண்கள்


நேர்காணல் – 100 மதிப்பெண்கள்


மொத்தம் – 850 மதிப்பெண்கள்


விண்ணப்பக் கட்டணம்


முதல் நிலைத் தேர்வுக்கு – ரூ.100


முதன்மைத் தேர்வுக்கு – ரூ. 200


சிறப்புப் பிரிவினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப கட்டணத்தில் சலுகையோ, நீக்கமோ உண்டு.


ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 419 0958 என்ற இலவச எண்ணை அழைக்கலாம். (அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை அழைக்கலாம்.)


முழுமையாக விவரங்களை அறிய: https://tnpsc.gov.in/Document/english/05_2024_ENG_.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/