நடிகை யாஷிகா ஆனந்த்
" இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற திரைப்படத்தின் மூலம் இளசுகள் மத்தியில், அறிந்த முகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். பல்வேறு இன்டர்வியூக்கலில் யாரும் பேசாத சில சர்ச்சை கூறிய வகையிலும் பேசி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.
" யாஷிகாவிற்கு ஏற்பட்ட சோகம் "
இந்தநிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு, நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். புதுச்சேரியில் தனது நண்பர்கள் மற்றும் தோழியுடன் ரெசாட்டில், பாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பொழுது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய பொழுது தனது காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களான சையத் , ஆமீர் , பாவனி வள்ளி செட்டி ஆகியோருடன் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்த பொழுது, சாலை தடுப்ப சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் யாஷிகா ஆனந்தின் உயிர்த்தோழி பாவனி வள்ளி செட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மறுபுறம் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. அவர் நகரக்கூட முடியாத அளவிற்கு, ஏற்பட்ட பாதிப்பில் பல மாதம் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் படிப்படியாக குணமாகிய நடிகை யாஷிகா ஆனந்த், சமீப காலமாக சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
" செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு "
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த பொழுது, நீதிமன்றத்தில் சரியாக ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து நீதிபதி யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரன் பிறப்பித்தார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகிய யாஷிகா ஆனந்த், அதன்பிறகு தொடர்ந்து நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
" வழக்கு மாற்றம் "
நடிகை யாஷிகா ஆனந்தின் வழக்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்பொழுது செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று நடிகை யாஷிகா ஆனந்த் தனது அடையாளங்களை மறைத்தவாறு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகி வருவதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் எதிரிகள் யாரும் பாதிக்கப்படாததால், விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என தெரிகிறது. மீண்டும் மே 03தேதி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.