நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று (நவம்பர் 10) வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-1 பதவிகளுக்கான தேர்வு அறிக்கை ஜூலை 21ஆம் தேதி வெளியானது. குறிப்பாக,
* துணை ஆட்சியர் (18) - Deputy Collector,
* காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26) - Deputy Superintendent of Police,
* வணிகவரி உதவி ஆணையர் (25) - Assistant Commissioner (Commercial Taxes),
* கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13)- Deputy Registrar of Cooperative Societies,
* Assistant Director of Rural Development,
* District Employment Officer in Tamil Nadu General Service உள்ளிட்ட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்குத் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
முதல்நிலைத் தேர்வு 30-10-2022 காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
ஹால்டிக்கெட் பதிவிறக்கம்
* தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
* அதில், Group 1 Hall Ticket 2022 என்ற பக்கத்தை க்ளிக் செய்து, ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு முறை
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று தேர்வர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல எம்பிசி/ டிஎன்சி பிரிவினர் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதலாம்.
பிசி, பிசி முஸ்லிம் பிரிவினருக்கும் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதும் வசதி வழங்கப்படுகிறது.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 முறை இலவச வாய்ப்பு உண்டு.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கும் முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை https://tamil.abplive.com/news/tamil-nadu/cancellation-of-accreditation-for-medical-colleges-if-extra-fees-are-charged-tn-govt-84106/amp