Group 1 Result 2024:  உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்து இன்று மாலை குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின.


குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 93 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது.


இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதினர்.  இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 28) வெளியாகி உள்ளன.  தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.  


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? 


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


அதில், WHATS NEW பகுதிக்குச் சென்று COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES ) (Oral Test) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது


தேர்வர்கள் file:///C:/Users/Admin/Downloads/CML_16_2022.pdfஎன்ற இணைப்பை க்ளிக் செய்தும், தேர்வு முடிவுகளைக் காணலாம்.


கூடுதல் தகல்வகளுக்கு https://www.tnpsc.gov.in/  என்ற இணைப்பை கிளிக் செய்யலாம். 




மேலும் படிக்க


Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!