TNPSC Group 1 Result 2023: மீண்டும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளில் ஒரு மாற்றம்.. ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு!

குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

குரூப் 1 தேர்வு முடிவுகள்

துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 1 பணியிடங்களுக்காகத் தேர்வர்கள் எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 92 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் , தற்போது மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 5ஏ தேர்வுகளுக்கான தலைமைச் செயலக சேவைக்கான உதவி பகுதி அலுவலர் தேர்வு 2023 ஏப்ரலில் நடைபெற்று, அதே மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன. ஆங்கில மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடங்களுக்கான தேர்வு 2023 பிப்ரவரியில் நடைபெற்று, அதே மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன.

தமிழ்நாடு சிறை சேவையின்கீழ் 8 ஆண் மற்றும் பெண் ஜெயிலர்களுக்கான தேர்வு 2023 பிப்ரவரியில் நடைபெற்று, அதே மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன.

முழுமையான விவரங்களை அறிய: https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf

Continues below advertisement
Sponsored Links by Taboola