தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீ ஏழைகாத்தம்மன்,ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை,சிவகங்கை, புதுக்கோட்டை,திருச்சி தஞ்சாவூர் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
இப்போட்டியினை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்டோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் முன்னிலை வகித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாய் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக 750 காவலர்கள் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
மேலும் மூன்று குழுக்களாக மருத்துவர்கள் செவிலியர்கள் முதலுதவி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என எட்டு மணி நேரத்திற்கு 400 வீரர்கள் களம் காண உள்ளனர்.கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடுகளை அடக்கிய வீரர்க்கு சிறப்பு பரிசாக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி ஆல்டோ கார் வழங்கப்பட உள்ளது. சிறந்த இரண்டு மாடுகளுக்கு டிவிஎஸ் பைக், எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட உள்ளது. தங்க காசு, வெள்ளி காசு, குத்துவிளக்கு, பீரோ, எல் இடி டிவி டைனிங் டேபிள் என ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளை வழங்குகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்