தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் ( Tamil Nadu Public Service Commission )


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் ஜனவரி-2024 மாதத்தில் வெளியிடப்படுவதாகவும் மேற்படி தொகுதி-4 பணி காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜூன் -2024 மாதத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலவச பயிற்சி வகுப்புகள்


இப்போட்டித் தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி-2024 மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://tnpsc.gov.in/ இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.


வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  


போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  ‘D’ – பிளாக் தரை தளம் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம் செங்கல்பட்டிற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களுக்கு 044-27426020  அல்லது 9499055895 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு  மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.