டிஎன்பிஎஸ்சி நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் திருத்தப்பட்டு 50 வேலை நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன. 20 தாள்களுக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வானவர்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு- உடல் தகுதித் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.

1:3/ 1:4 (முன் அனுபவம் தேவையில்லை) என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் 1:10 (அனுபவம் தேவைப்படும் இடுகை) சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்னதாக இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு (நேர்காணல் கொண்டது) 12.08.2024 காலை, 19.08.2024 காலை மற்றும் மதியம், 20.08.2024 காலை மற்றும் மதியம் மற்றும் 21.08.2024 மதியம் ஆகிய நாட்களில் நடைபெற்றது.

இதையும் வாசிக்கலாம்: PM Vidyalaxmi Scheme: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பிணையில்லாக் கடன்; பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் பற்றி தெரியுமா? 

இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் அறிந்துகொள்ளலாம். https://www.tnpsc.gov.in/document/Certificateverification/07_2024_COMBND_TECHNICAL_OT_POS_PUBLIST.pdf

தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேர்வர்கள் பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/

இதையும் வாசிக்கலாம்: TNPSC CTSE: தயாரா தேர்வர்களே; அடுத்த தேர்வு தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி- இதோ விவரம்!