தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் கடன் வழங்கும் வகையில், மத்திய அரசு புதிதாக பிரதமர் வித்யாலட்சுமி என்னும் திட்டத்தைத் தொடங்க உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அது என்ன வித்யா லட்சுமி திட்டம்? ( PM Vidyalaxmi scheme )பார்க்கலாம்.


வித்யா லட்சுமி திட்டம் என்றால் என்ன?


தரமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் (Quality Higher Education Institutions - QHEIs) சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டமே பிரதமர் வித்ய லட்சுமி திட்டம் ஆகும். இதன்படி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்கு பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனை அளிக்கும்.


ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதன்மூலம் மொத்த கல்விக் கட்டணமும் படிப்புக்கான பிற செலவுகளும் அளிக்கப்படும்.


யாரெல்லாம் பயன் பெற முடியும்?


என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய தரவரிசைப் பட்டியலில் (NIRF  முதல் 100 இடங்களைப் பிடிக்கும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்விக் கடன் அளிக்கப்படும்.  ) ஒட்டுமொத்த தரவரிசையில், பிரிவு வாரியான, துறை வாரியான தரவரிசையில் 100 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.


அதேபோல என்ஐஆர்எஃப் தரவரிசையில் 101-200 வரை பிடித்த மாநிலக் கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். அதேபோல அனைத்து மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெறலாம்.


22 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்


ஒவ்வோர் ஆண்டும் என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலைப் பொருத்து வித்யா லட்சுமி கல்விக் கடன் திட்டத்துக்குத் தகுதியான கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும். இம்முறை 860 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற உள்ளன. PM-Vidyalaxmi திட்டத்தின்மூலம் 22 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


7.5 லட்சம் வரையான கல்விக் கடனுக்கு, 75 சதவீதத் தொகை அளவுக்கு மாணவர்களுக்கு வழங்கப்படும்.




3 சதவீத வட்டி மானியம்


அதேபோல 8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பெறும் கல்விக் கடனில் 3 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். எனினும் அவர்கள் வேறு எந்த அரசு உதவித்தொகையையும் பெறக் கூடாது. ஆண்டுதோறும் 1 லட்சம் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.


அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, வித்யா லட்சுமி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.  


 
விண்ணப்பிப்பது எப்படி?


* ஆர்வமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் மத்திய உயர் கல்வி அமைச்சகத்தின் https://www.education.gov.in/higher_education என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.


* அதில், 'PM-Vidyalaxmi' என்ற பக்கத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு:  https://www.education.gov.in/