திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை பகுதிகளில் பல்வேறு கல் குவாரிகள் செயல்படு வருகின்றது. இது தி.மு.க., பிரமுகர்களுக்கு சொந்தமான குவாரிகள் என்றும் கூறப்படுகிறது. இந்த குவாரிகளில் புவியியல் துறையில் பெறப்பட்ட நடைச்சீட்டு அளவை விட அதிக அளவு கனிமவளம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. 


மேலும், இந்த குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்தும், பாறைகளை தகர்ப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் கர்ப்பமடைந்த பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல், சமீபத்தில் சீலாத்திகுளத்தில் கல் குவாரியில் வெடி வைத்த அதிர்வில் வீடு இடிந்து ஒரு குழந்தை பலியானது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், ராதாபுரம் வட்டார குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமவளம் முழுவதும், போலியான நடைச்சீட்டுகள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. 


புகாரின் அடிப்படையில், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ண மூர்த்தி சமீபத்தில் திடீர் சோதனை நடத்தி லாரிகளை பறிமுதல் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இருக்கன்துறையில் இசக்கியப்பன் என்பவரது பெயரில் இயங்கும் ஒரு கல் குவாரியில் நடத்திய சோதனையில், 4.04 லட்சம் கனமீட்டர் கனிமவளம் நடைச்சீட்டின்றி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


மேலும், அந்த நிறுவனத்திற்கு 20 கோடியே 11 லட்சத்து 64 ஆயிரத்து 352 ரூபாய் அபராதம் விதித்தார். நேர்மையான அதிகாரிகளான கலெக்டர் திருநெல்வேலி விஷ்ணு, சப் கலெக்டர் சிவ. கிருஷ்ணமூர்த்தி, பி., மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, கனிம வளங்கள் கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்தனர்.


இதையடுத்து, தி.மு.க., பிரமுகர்கள் பினாமி பெயரில் நடத்தும் குவாரிகளுக்கு அபராதம் விதித்த சப் - கலெக்டரை இடமாற்றம் செய்தனர்.தொடர்ச்சியாக லாரிகளை பறிமுதல் செய்ததால் எஸ்.பி., மணி வண்ணனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 



அதேபோல், கலெக்டர் விஷ்ணுவையும் மேலிடத்தில் இருந்து அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியது.மேலும், நேற்று திருநெல்வேலி புதிய எஸ். பி.யாக பொறுப்பேற்ற சரவணன், கல் குவாரி கனிம வள கடத்தல் போன்ற பிரச்சனைகளால் குறித்து தம்மை யாரும் சந்திக்க வரவேண்டாம் என பத்திரிகை அலுவலகங்களுக்கு தகவல் கொடுத்து பொறுப்பேற்றதாக தெரிகிறது. 


இதற்கிடையே, கோடி 20 காடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட இசக்கியப்பனை இன்று விசாரணைக்கு கலெக்டர் அனுப்பியுள்ளார். வேறு சில நிறுவனங்கள் மீது கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண