சட்டப்படிப்பு படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு பாடம் வழங்கப்பட்டு வருகின்றன. வருடாந்திரமாக இந்தப் பட்டப்படிப்பில் 1651 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சீர்மிகு சட்டக் கல்லூரியில் ( School of Excellence in Law) இளங்கலை.(BA),இளங்கலை வனிக மேலாண்மை.(BBA), மற்றும் இளங்கலை கணினி பயன்பாடு (BCA)., மற்றும் பி.காம்., படிப்புகளுடன் சேர்த்து எல்.எல்.பி.(LLB), இணைந்து ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. இதில் 600 இடங்களுக்கு கலந்தாய்வு வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 


இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கெனவே தொடங்கி நட்ந்து வருகிறது. விண்ணப்ப பதிவு செய்வதற்கான தேதி இன்றுடன் முடிகிறது. 


வெளிநாடு வாழ் தமிழர் பிரிவில் (NRI Quota) ஒதுக்கீடு கேட்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் அளிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை www.tndalu.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.