4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து டிஆர்பி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கூறி உள்ளதாவது:‌


ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள 4000 உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப்பணியிடங்களுக்கு போட்டித்‌ தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்ய 15.05.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில்‌, விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ளவும்‌ அவகாசம்‌ வழங்க கோரியதின்‌ அடிப்படையில்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம்‌ செலுத்தியவர்கள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்பினால்‌ 16.05.2024 முதல்‌ 19.05.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம்‌ செய்ய ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்‌டுள்ளது.


மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ திருத்தங்கள்‌ (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்காணும்‌ வழிமுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.



  1. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வு கட்டணம்‌ செலுத்திய விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய அனுமதிக்கப்படுவர்‌.

  2. விண்ணப்பதாரர்கள்‌ தங்களது விவரங்களை திருத்தம்‌ செய்து புதுப்பித்தவுடன்‌, கடைசி பக்கத்தில்‌ உள்ள “சமர்ப்பி” ” (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில்‌ செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும்‌. அவ்வாறு செய்யவில்லை எனில்‌ செய்யப்பட்ட மாற்றங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

  3. கடைசியாக உள்ள சமர்ப்பி: (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில்‌, அன்னாரின்‌ விண்ணப்பம்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள்‌ மட்டுமே பரிசீலிக்கப்படும்‌.

  4. விண்ணப்பதாரர்கள்‌ மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின்‌ வேறு எந்த மாற்றமும்‌ ஏற்றுக்கொள்ள இயலாது.

  5. திருத்தம்‌ மேற்கொள்ளும்‌ விண்ணப்பதாரர்கள்‌, திருத்தம்‌மேற்கொள்ளும்‌ குறிப்பிட்ட இடத்தில்‌ (Panel) உரிய திருத்தம்‌ மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும்‌ சரிபார்க்க வேண்டும்‌.


ஏனெனில்‌ சில பகுதிகளில்‌ (Fileds) திருத்தம்‌ செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும்‌ மாற்றம்‌ செய்ய வேண்டிய அவசியம்‌ எற்படும்‌.



  1. திருத்தம்‌ செய்த பின்னர் Print Preview Page சென்று, அனைத்தும்‌ சரியாக உள்ளபட்சத்தில்‌ Declaration-ல்‌ ஒப்புதல்‌ அளித்த பின்னரே தங்களின்‌ விண்ணப்பம்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌.

  2. விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பத்தில்‌ எந்தவொரு மாற்றமும்‌ செய்யவில்லை எனில்‌ முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்‌.

  3. விண்ணப்பதாரர்கள்‌ கைபேசி எண்‌, மின்னஞ்சல்‌ முகவரி ஆகியவற்றில்‌ மாற்றங்கள்‌ செய்ய இயலாது.

  4. இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) சார்ந்த விவரங்களில்‌ திருத்தம்‌ இருப்பின்‌ விண்ணப்பதாரர்‌ செலுத்திய கட்டணத்‌ தொகையில்‌ ஏற்படும்‌ மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்‌.

  5. விண்ணப்பத்தில்‌ கட்டணத் தொகையில்‌ திருத்தம்‌ செய்ய வேண்டியிருப்பின்‌ கூடுதலாக கட்டணம்‌ செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்‌, தேர்வுக்கான முழுகட்டணத்‌ தொகையினையும்‌ மீண்டும்‌ செலுத்த வேண்டும்‌.

  6. விண்ணப்பத்தில்‌ கட்டணத்தொகையில்‌ திருத்தம்‌ செய்யும்போது குறைவாக கட்டணம்‌ செலுத்த வேண்டியிருப்பின்‌, விண்ணப்பதாரர்‌ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின்‌ மீதித்தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.