PGTRB முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
இதுகுறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளதாவது: ''ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.02/2025, நாள் 10.07.2025-ன்படி 2025ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு எதிர்வரும் 12.10.2025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 2,36,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இன்று முதல் ஹால் டிக்கெட் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இன்று (30.09.2025) முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
- https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வர்கள் உள்ளே செல்ல வேண்டும்.
- அதில், Login ID மற்றும் Password ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- உடனே தேர்வர்களின் ஹால் டிக்கெட் தங்களின் திரையில் தோன்றும்.
- அதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/