கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வைத்து அறிக்கை தரட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன். முழு விவரம் தெரியாமல் எதையும் கூற முடியாது என்று முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரச்சார திட்டத்தை அண்மையில் அறிவித்தார். அதன்படி, திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சார பயணத்தை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

Continues below advertisement

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இது  தமிழ் நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது வரை தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு சரி கடந்த மூன்று நாட்களாக விஜய் அமைதியாக இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை விரிவாக்கம் செய்யப்பட்ட பதினெட்டாம் கால்வாய் சேதமடைந்தது குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாதது குறித்தும் விவசாயிகள் போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு. அவர் கூறியது அம்மா ஆட்சியில் போடிநாயக்கனூர் வரை உள்ள விவசாயிகள் பயனடைய பதினெட்டாம் கால்வாய் கொண்டு வரப்பட்டது.

கடைமடை வரை நீர் வந்து வைகை அணைக்கு உபரி நீர்  சென்றது.  தற்போது மூன்று ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாமல் உள்ளது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இலவம் பஞ்சு மெத்தை தலையணைகள் 12 சதவீதத்திலிருந்து ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது . குறித்து இலவம் பஞ்சு உற்பத்தியாளர்கள் மனு கொடுத்தது குறிப்பிட்ட கேள்விகளுக்கு இது மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டிய விஷயம் என்று கூறினார். மேலும் 18-ம் கால்வாய் நீர் குறித்தும் போடிநாயக்கனூரில் சுமார் 48 பஞ்சு பேட்டைகள் இயங்கி  வந்த நிலையில் தற்போது 8 பஞ்சு பேட்டையில் மட்டுமே செயல்பட்டு வருவது குறித்து இலவம் பஞ்சு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவது குறித்து கேள்விகளுக்கு விரைவில் தொடங்க இருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்று கூறிச் சென்றார்.