ஏற்கெனவே திட்டமிட்டபடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை (அக்.12) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வை எழுத 1998 காலிப் பணியிடங்களுக்கு 2,36,530 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Continues below advertisement

இந்த நிலையில், தேர்வர்கள் என்ன செய்யலாம்? கூடாது? என்று ஆசிரியர் தேர்வு மையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

தேர்வர்களின் கவனத்திற்கு

+ தேர்வு நாள்: 1210.2025 (ஞாயிற்றுக் கிழமை)

Continues below advertisement

+ தேர்வு நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை (அனைத்து தேர்வர்கள்)

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (PWD தேர்வர்கள் மட்டும்)

தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket) விவரங்களை TRB இணைய தளத்தில் சரிபார்த்து, தேர்வு நாளுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து, போதுமான நகல்களை (Copies) வைத்துக் கொள்ளவும். தேர்வு நாளன்று (12.10.2025) காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு (Exam Centre) வருகை புரிதல் வேண்டும்.

தேர்வு மையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வறை எண் மற்றும் இருக்கை எண் விவரங்களின்படி குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் தேர்வறைக்குச் சென்று உரிய இருக்கையில் அமர வேண்டும்.

எப்போது வர வேண்டும்?

தேர்வு மைய நுழைவாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்படும். இதன் பிறகு கண்டிப்பாகத் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எதற்கு அனுமதி? எதற்கு இல்லை?

தேர்வறையில் தங்களின் அடையாளம் சரிபார்ப்பின்போது Aadhar அட்டை (அல்லது) PAN அட்டை (அல்லது) Passport (அல்லது) Driving License ஏதேனும் ஒன்றின் அசலை (Original) கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும் (Photo ID)

தேர்வின் போது OMR விடைத்தாள் படிவம், வருகைப் பதிவுப் படிவம் ஆகியனவற்றை Shade/ பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகப் போதுமான transparent கருப்பு மை Ball Point பேனாவை எடுத்து வரவேண்டும்

தேர்வறைக்குள் கைப்பேசி, எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம், Calculator, கையேடுகள் போன்றனவற்றுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

அரசினால் நடத்தப்படுகின்ற இத்தேர்வு சார்ந்து தேர்வு மையம் மற்றும் தேர்வறையில் வழங்கப்படுகின்ற வழிகாட்டுதல்களைத் தவறாது பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.