Schools Working Days: அடக்கடவுளே... பள்ளிகளுக்கு 12 நாட்கள் தொடர்ச்சியாக வேலை நாளா? எப்படி?

ஜனவரி 20 முதல் 31ஆம் தேதி வரை (20.01.2025 முதல் 31.01.2025) தொடர்ச்சியாக பள்ளிகள் இயங்க உள்ளன. வார விடுமுறை இருக்குமே? அவை கிடையாதா? எப்படி 12 வேலை நாட்கள்? என்று கேள்வி எழலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு 12 நாட்கள் தொடர்ந்து வேலை நாட்கள் உள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் திட்டமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அடுத்த வாரம் பொங்கல் பண்டிகைக்கு 9 நாள் விடுமுறை

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக ஜனவரி 11, 12 ஆகியவை சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13 விடுமுறை எடுத்துக்கொண்டால், ஜனவரி 14, 15, 16 மற்றும் ஜனவரி 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறைகளாக உள்ளன. தொடர்ந்து ஜனவரி 18, 19 ஆகிய நாட்கள் வார இறுதி என்பதால் அவையும் விடுமுறையே என்பதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு 12 தொடர் வேலை நாட்கள்

அதே நேரத்தில் ஜனவரி 20 முதல் 31ஆம் தேதி வரை (20.01.2025 முதல் 31.01.2025) தொடர்ச்சியாக பள்ளிகள் இயங்க உள்ளன.  எனில் வார விடுமுறை இருக்குமே? அவை கிடையாதா? எப்படி 12 வேலை நாட்கள்? என்று கேள்வி எழலாம். அது எப்படி? பார்க்கலாம்.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக 17.01.2025 அன்று அறிவிக்கப்பட்ட  விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி 20ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்க உள்ளன. ஜனவரி 25 சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்பட உள்ளன. தொடர்ந்து 26.01.2025 ஞாயிறு அன்று குடியரசு தினம் என்பதால் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியது முக்கியம்.

அடுத்த 5 நாட்கள்


7 வேலை நாட்களைத் தொடர்ந்து மேலும் அடுத்த திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக பணி செய்ய வேண்டும். இதனால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பள்ளிகள் வேலை நாட்களாக செயல்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதனைக் கருத்தில் கொண்டு தங்களது பணி திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க மறக்காதீங்க: Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?

Continues below advertisement
Sponsored Links by Taboola