2023ஆம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


மார்ச், எப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள்‌ மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று உரிய நாட்களில்‌ ஆவணங்களுடன்‌ நேரில்‌ சென்று விண்ணப்பங்கள்‌ ஆன்‌லைனில்‌ பதிவு செய்து கொள்ள வேண்டும்‌.


* ஏற்கனவே நோடித்‌ தனித்தேர்வராக மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத, தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதுவதற்காக விண்ணப்பிக்கலாம்‌.


* கடந்த ஆண்டு முதன்முறையாக நேரடி தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள்‌, தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத விண்ணப்பிக்கும்‌பொழுது, அத்துடன்‌ மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில்‌ அனைத்துப்‌ பாடங்களையும்‌ எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌


விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்‌ 


கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்களுக்கு தனித்‌ தேர்வர்கள்  நேரில்‌ செல்ல வேண்டும். 26.12.2022 (திங்கட்‌ கிழமை) முதல்‌ 03.01.2023 (செவ்வாய்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும்‌ 01.01.2023 (ஞாயிற்றுக்‌ கிழமை) நீங்கலாக ) காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்துகொள்ள வேண்டும்‌.


தத்கல்‌ முறையில்‌ விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்‌ :


மேற்காண்‌ தேதிகளில்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌ 05.01.2023 (வியாழக்‌ கிழமை) முதல்‌ 07.01.2023 ( சனிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌அரசுத்‌ தேர்வுத்‌ துறை சேவை மையத்திற்கு நேரில்‌ சென்று ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


தேர்வுக்‌ கால அட்டவணை


மார்ச்‌ , ஏப்ரல்‌ 2023, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும்‌ நாட்கள்‌ குறித்த தேர்வுக்‌ கால அட்டவணையினை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌.


ஒப்புகைச்சீட்டு 


ஆன்‌லைனில்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு  வழங்கப்படும்‌. அதில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை‌ பயன்படுத்தியே அரசுத்‌ தேர்வுத்‌ துறை பின்னர்‌ அறிவிக்கும்‌ நாளில்‌ தேர்வுக்‌ கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.