நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளுக்கு நாளை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022- 2023 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பி.பார்ம். (லேட்டரல் என்ட்ரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


என்னென்ன படிப்புகள்?


பி.ஃபார்ம் 
பி.பி.டி.
பி.ஏ.எஸ்.எல்.பி
பி.எஸ்சி. (நர்சிங்)  - B.Sc. (NURSING)
பி.எஸ்சி. ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் -  B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி - RADIO THERAPY TECHNOLOGY
பி.எஸ்சி. கார்டியோ- பல்மனரி பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி - CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
பி.எஸ்சி. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் - MEDICAL LABORATORY TECHNOLOGY
பி.எஸ்சி. ஆபரேஷன் தியேட்டர் & அனஸ்தீசியா டெக்னாலஜி - OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
பி.எஸ்சி. கார்டியாக் டெக்னாலஜி - CARDIAC TECHNOLOGY
பி.எஸ்சி. கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி -  CRITICAL CARE TECHNOLOGY
பி.எஸ்சி. டயாலிசிஸ் தொழில்நுட்பம் - DIALYSIS TECHNOLOGY
பி.எஸ்சி. மருத்துவ உதவியாளர் - PHYSICIAN ASSISTANT
பி.எஸ்சி. விபத்து & அவசர சிகிச்சை தொழில்நுட்பம் - ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
பி.எஸ்சி. சுவாச சிகிச்சை - RESPIRATORY THERAPY
B.OPTOM
பி.ஓ.டி -   B.O.T
பி.எஸ்சி.நியூரோ எலக்ட்ரோ பிசியோலஜி- NEURO ELECTRO PHYSIOLOGY ஆகிய படிப்புகள் உள்ளன.


தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும். 


www.tnhealth.tn.gov.in


www.tnmedicalselection.org


இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள் - 01.08.2022 காலை 10 மணி முதல்


இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் - 12.08.2022 மாலை 5 மணி வரை.


கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/prospectus_pmc.pdf என்ற 2021- 22ஆம் கல்வி ஆண்டுக்கான வழிகாட்டியைக் காணலாம். 


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண