தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 47 பிஸியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (நவ.20) கடைசித் தேதி ஆகும். ஏற்கெனவே ஒருமுறை விண்ணப்பப் பதிவு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனி அவகாசம் நீட்டிக்கப்படாது என்றே தெரிகிறது.
எம்ஆர்பி (MRB) எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பிஸியோதெரபிஸ்ட் கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன. இதில், 46 புதிய காலி இடங்களும் 1 பழைய இடமும் உள்ளன.
இதற்கு அக்டோபர் 18ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க நவம்பர் 7 கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசித் தேதி ஆகும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பிஸியோதெரபிஸ்ட் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்சி, எஸ்சி அருந்ததியின தேர்வர்கள் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500
ஊதியம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பிஸியோதெரபிஸ்ட்களுக்கு ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
*அதில், https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/LoginAction_input.action என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் செய்ய வேண்டும்.
* ஏற்கெனவே முன்பதிவு செய்யாதவர்கள், https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/instructions.jsp என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
* அல்லது https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/instructions2.jsp என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய முழுமையான அறிவிக்கையைக் காண:https://mrb.tn.gov.in/pdf/2024/Physiotherapist_Gr_II_181024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
இ- மெயில் முகவரி: mrb2024@onlineregistrationform.org
தொலைபேசி எண்: 044 24355757
கூடுதல் தகவல்களுக்கு: https://mrb.tn.gov.in/