தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" எனும் மூன்று நாள் முழுநேர பயிற்சி 11.11.2025 முதல் 13.11.2025 வரை (காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை), இந்த நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Continues below advertisement


பயிற்சி சுருக்கம்


பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனைகளை செயலில் பயனடையும் வகையில் Al prototypes (செயலியாக) மாற்றக் கற்றுக்கொள்வார்கள்.


முன்னணி ஸ்டார்ட் அப்கள் பயன்படுத்தும் No-Code / Low-Code Al கருவிகள் பற்றிய பயிற்சி.


கீழ்கண்ட பிரபலமான தளங்களை கொண்டு நேரடி பயன்பாட்டு செயலிகள் உருவாக்கம்:


ChatGPT / Gemini Pro / NotebookLM


Firebase / Glide / Zapier / Lovable / Replit / Bolt


Prompt Engineering முறைகள்


செயல்முறை பயிற்சி


வழிகாட்டியுடன் படிப்படியாக கற்றல்


AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம்


தனிப்பட்ட மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான தானியங்கி முறைகள்


கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம்.


தயாரிப்பு சிந்தனை மற்றும் ஸ்டார்ட்அப் மனப்பாங்கு


உலகளாவியசிக்கல்களுக்கு தீர்வு காணும் AI MVP உருவாக்கம்


Problem-Solution Fit, JTBD C போன்ற ஸ்டார்ட் அப் கோட்பாடுகள்


உங்கள் App-இன் prototype-ஐ முதன்மை வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறன்.


யாருக்கெல்லாம் பொருத்தமானது?


மாணவர்கள், நிறுவனர்கள், ஆரம்ப நிலை தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொருத்தமானது.


பேராசிரியர் சான்றிதழ் / போட்டிப் பதிவுகளில் காண்பிக்க AI மாதிரிகள்


Product Managers, Solopreneurs பயன்படுத்தும் கருவிகள் கற்றல்.


வேலை வாய்ப்பு, ஹேக்கத்தான் போட்டிகள் மற்றும் லிங்க்ட்இன் தளங்களில் செயல்படுத்தும் வாய்ப்புகள்.


தொழில் முனைவு பாதைகள்


AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வணிகம் அல்லது ஃப்ரீலான்சிங் தொடங்க அடித்தளம் அமைத்தல்.


குறைந்த செலவில், விரைவில் உங்கள் ஸ்டார்ட்அப் யோசனைகளை பரிசோதித்தல்.


என்ன தகுதி?


இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஓரளவு கணினி அனுபவம் இருத்தல் வேண்டும்.


தங்கும் விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.


பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்.


மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 9360221280/ 9840114680 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்புகொள்ளலாம்.


முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.


அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.